சிம்லா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 20 பேர் பலி

இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் கின்னார் பகுதியில் இருந்து சோலன் பகுதியை நோக்கி இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.ராம்புர் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து நடந்ததை அறிந்த அப்பகுதி மக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply