அமெரிக்கா: பிரபல நடிகரும், இசைக்கலைஞருமான செஸ்டர் பென்னிங்டன் தற்கொலை

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகரும் பிரபல இசைக்கலைஞருமான செஸ்டர் பென்னிங்டன் (41) தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் அருகே உள்ள பாலோஸ் வெர்டஸ் என்ற இடத்தில் வசித்து வந்த செஸ்டர் பென்னிங்டன், லின்கின் பார்க் என்ற இசைக்குழு மூலம் மேடைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். மேலும், சில ஹாலிவுட் படங்களிலும் குறிப்பிடத்தக்க வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று தனது இல்லத்தில் பென்னிங்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். போதைப்பொருட்கள் அதிகளவில் அவர் பயன்படுத்துவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. பென்னிங்டன் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளது அந்நாட்டு இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply