தினகரன் அணியின் 19 பேரும் அமைச்சர்களாகும் தகுதியுள்ளவர்களே: ஆர்.பி.உதயகுமார்
தினகரன் அணியில் உள்ள 19 எம்.எல்.ஏக்களும் அமைச்சர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தான் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்த்துள்ளார்.சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில், செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அப்போது அவர், அந்த அணியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் பழனியப்பன், வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் என 19 பேருக்கும் அமைச்சர்களாவதற்கான தகுதி இருக்கிறது.
அதற்கான பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வாய்ப்பு என்பது சட்டத்திற்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டது. அதனை சரியான நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வழங்குவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக, அவரைப் போல அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இடத்தில் முதல்வர் பழனிசாமி இருக்கிறார். எனவே, அந்த அணியில் இருப்பவர்கள் அனைவரும் அதிமுக ஆட்சிக்கு பிரச்சனை இருக்கும் நிலையில், ஓடோடி வந்து எங்களோடு சேர்ந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைவரையும் அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply