டெனீஸ்வரன் நீக்கத்துக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம்?
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது,அன்றைய தினமே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என, வடமாகாண முன்னாள் மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “வடமாகாண முதலமைச்சர், ஏனைய அமைச்சர்கள், முன்னை நாள் சுகாதார அமைச்சர், வடமாகாண ஆளநர் ஆகியோருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 30ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்துள்ளேன்.
குறிப்பாக, கடந்த காலங்களில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பாக இருக்கின்றது. ஒரு விடையத்தை கூற முடியும். வடமாகாண ஆளுநர், கடந்த மாதம் 23ஆம் திகதி புதிய அமைச்சர்கள் இருவரை நியமிக்கின்ற அதே சந்தர்ப்பம் கடந்த 20ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் என்னை அமைச்சில் இருந்து நீக்கியதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply