அனுஷ பெல்பிட்ட, லலித் வீரதுங்க ஆகியோருக்கு சிறை
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் சில் துணி பகிரப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் ஜனாதிபதி
செயலாளர் லலித் வீரதுங்க தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய குறித்த இருவருக்கும் தலா மும்மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 20 லட்சம் ரூபா தண்டப்பணம் அறவிட்டுள்ள மேல் நீதிமன்றம், ஏற்பட்ட நட்டத்திற்காக தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு 100 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
100 மில்லியன் ரூபாவினை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த தவறும் பட்சத்தில் குறித்த இருவருக்குமான சிறைத்தண்டனை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படும் என்பதோடு,
குற்றவாளிகள் இருவரில் ஒருவரேனும் 20 இலட்சம் ரூபாவினை செலுத்த தவறும் பட்சத்தில் விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை காலம் மேலும் ஆறு மாதத்திற்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் நிதியில் சுமார் 600 மில்லின் ரூபா செலவில் சில் துணிகள் பகிரப்பட்டதாக அனுஷ பெல்பிட்ட மற்றும் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply