மெக்சிகோ நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
தென்மேற்கு பசிபிக் கடலோரம் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் தெற்கு கடல்பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 8 அலகுகளாக பதிவாகியுள்ளது. பிஜிஜியாபன் நகரில் இருந்து தென்மேற்கே சுமார்123 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடையில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மெக்சிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து பேரலைகள் எழுவதற்கான ஏற்பட வாய்ப்பு உள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply