புதிய அரசியல் யாப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் : சி.சிறீதரன்
புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். மன்னார் நகரசபை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது வெளியாகியுள்ள அரசியல் அமைப்பின் நகல் வரைவில் ஒற்றை ஆட்சிக்குத் தீர்வு, தொடர்ந்து பௌத்த மதத்திற்கான முன்னுரிமை, வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு, மாற்றம் செய்யப்படாத தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுத்தல் போன்ற ஐந்து விடயங்களிலும் துளியளவிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
அத்துடன், தமிழ் மக்களை ஒரு தேசிய இன குழுமமாக அடையாளப்படுத்தும் விடயங்கள் திட்டமிட்டே இந்த புதிய அரசியல் அமைப்பில் தகர்த்தப்பட்டுள்ளமை நிதர்சனமான உண்மையாகியுள்ளது.
வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத சமஸ்டி அற்ற ஒரு தீர்வை தமிழர்கள் மீது திணிக்க முற்பட்டால், அது தமிழர் தரப்பு இராஜதந்திரத்திற்கு ஏற்பட்ட தோல்வியாகவே கொள்ளப்படும் என சி.சிறீதரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply