தமிழகத்தில் கழகங்களின் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கழகங்கள் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை. ஆகவே பாஜக ஆட்சி அமையும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை தெற்கு மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியத்தலைவர் ரகுபதி வரவேற்றார். பா.ஜ.க நிர்வாகிகள் செல்வக் குமார், பாபார மேஷ், நஞ்சப்பன், நடராஜ், தங்கவேல் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதா கிருஷ் ணன், மாநில பொதுச் செய லாளர் வானதி சீனி வாசன் ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
ஜிஎஸ்டி வரி விதிப்பில் தற்போது 27 பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கண்டறியப்பட்டு வரி குறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முக்கிய நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு முன்பே 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
மாநில அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் நடைபெறும். தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி அமைப்பதை மக்கள் விரும்பவில்லை. ஆகவே பா.ஜ.க ஆட்சி தமிழகத்தில் அமையும். பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் ரெயில் இயக்கும் நேரத்தை மாற்றவும், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் கோரிக்கை வந்துள்ளது. கோரிக்கை குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் கவகத்திற்கு கொண்டுசெல்லப்படும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply