கானா நாட்டில் இயற்கை எரிவாயு கிடங்கில் வெடி விபத்து : 6 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் கினியா வளைகுடா பகுதியில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான கானாவில் ஏராளமான பெட்ரோலிய கிணறுகளும், இயற்கை எரிவாயு கிடங்குகளும் இயங்கி வருகின்றன.
அவ்வகையில், அந்நாட்டின் தலைநகரான அக்கரா நகரின் மையப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு கிடங்கில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த எரிவாயு, பயங்கர சப்தத்துடன் மிகப்பெரிய தீப்பிழம்பாக மாறி வானத்தை நோக்கி சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டில் இதேபோல் ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவான நிலையில் இதைப்போன்ற எரிவாயு கிடங்குகள் இயங்கி வருவதற்கு அக்ரா நகர மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply