பாகிஸ்தானில் கொடூரம்: நாடக நடிகை சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முல்தான் பெருநகரை சேர்ந்தவர் ஷமிம்(29). இங்குள்ள ஷா நகர் பகுதியில் வசித்துவந்த இவர் சிறந்த நடனக் கலைஞராகவும், பிரபல நாடக நடிகையாகவும் இருந்து வந்தார்.
ஷமோ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவரது வீட்டுக்கு இன்று காலை வந்த சில மர்ம நபர்கள் ஷமிமை வெளியே அழைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஷமிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஷமிமுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரது சகோதரர் கூறியுள்ள நிலையில் அவரது முன்னாள் கணவர் உள்பட சிலரிடம் விசாரிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.
பாகிஸ்தானில் சமீபகாலமாக பல நாடக நடிகைகள் இதுபோல் முன்னாள் காதலர்களாலும், எதிரிகளாலும் கொல்லப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply