ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியா அணுஆயுதங்களை பயன்படுத்தினால், அந்நாடு பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜிம் மெட்டீஸ், சியோலுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

சியோலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜிம் மெட்டீஸ் பங்கேற்று பேசும்போது, “அமெரிக்கா மீதோ அல்லது அதன் நட்பு நாடுகள் மீதோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் தோற்கடிக்கப்படும். வடகொரியா அதன் அணுஆயுதங்களை பயன்படுத்த நினைத்தால், அது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை சந்திக்க தயாராக இருக்கவேண்டும். உறுதியான நடவடிக்கை கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கும்” என்றார்.

தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply