வடபுல முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு – நினைவு நாள் அனுஷ்டிப்பு
1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நினைவுநாள் அனுஷ்டிப்பு இன்று (30) காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் இடம்பெற்றது.இதன் போது அப்பகுதியில் கடும் மழைக்கு மத்தியிலும் ஒன்று கூடிய யாழ் முஸ்லிம் மக்கள் ஒக்டோபர் 30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும், சொந்தமண்ணில் இன்றுடன் 27 வருடங்கள் கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளை மதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஆறாத்துயரமாக வெளிப்படுத்தினர்.
தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதருண்டு அகதி நிலையிலேயே தற்போது வாழ்ந்துவருகின்றனர்.
எனவே, எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply