யுத்தம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்:வீ .ஆனந்தசங்கரி

பல்லின மக்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாய் அமைந்த யுத்தம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பிற்பாடு இவ்வாறானதொரு ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பின் அதனூடாக பல அரசியற் தலைமைகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டிருக்கும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் யுத்தம் காரணமாக 50 – 6 0ஆயிரம் வரை மக்கள் உயிரிழந்துள்ளமையை நினைவு கூறும் தமிழர் விடுதலைக் கூட்டணி 2004 ஆம் ஆண்டு தமிழ் மக்களை நாடி வந்த நல்ல சந்தர்ப்பம் புத்திசாதுரியமற்ற சிலரின் செயற்பாடுகள் காரணமாக கைநழுவிப் போனதாக
குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்று அந்த சந்தரப்பம் பயன்படுத்தப்பட்டிருந்தால் நிலைமை மாறுபட்டிருக்கும் எனவும் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ .ஆனந்தசங்கரியின் கையொப்பத்தில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவற்றை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள கூட்டணி மக்களின் துயரங்களுக்கு காரணமானவர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கும் அது இறுதி சந்தர்ப்பமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply