பிரான்ஸ் வணிக வளாகத்தில் ஐ.எஸ். பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு

தெற்கு பிரான்சின் ட்ரேபெஸ் நகரில் உள்ள வணிகவளாகத்தில் இன்று புகுந்த மர்மநபர் அங்குள்ள பொதுமக்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்களை காப்பாற்ற முயன்ற போலீசார் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினான். இதில் ஒரு போலீசார் காயமடைந்துள்ளார். அவன் பிடியில் 8 அப்பாவி மக்கள் கைதிகளாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவன் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம். பயங்கரவாதியிடமிருந்து பொதுமக்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிணைக்கைதிகளாக உள்ள பொதுமக்களில் ஒருவரை பயங்கரவாதி கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply