பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டது

நேற்று நள்ளரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 09 ரூபாவாலும் டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

சுபர் டீசல் மற்றும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் பேச்சாளர் அத தெரணவிடம் கூறினார்.

புதிய விலைகளின் படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 126 ரூபாவிற்கும் டீசல் ஒரு லீற்றர் 100 ரூபாவிற்கும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply