சொத்து பிரச்சினை காரணமாக தம்பி மனைவியை துண்டுதுண்டாக வெட்டி கொன்ற மைத்துனர்

தமிழகத்தில் தம்பி மனைவியை சொத்து பிரச்சினை காரணமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டம் மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர் என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

ஜோசப் சிங்கப்பூரில் பெயிண்டராக பணியாற்றிவரும் நிலையில் எஸ்தர் தனது குழந்தையுடன், மேலாளவந்தசேரியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 6ம் திகதி முதல் எஸ்தரை காணவில்லை.இது குறித்து அவர் குடும்பத்தார் ஜோசபுக்கு தகவல் கொடுத்த நிலையில் கிராமத்துக்கு வந்த கணவர் பொலிஸில் புகார் செய்துள்ளார்.

பொலிஸார் ஜோசப்பின் உறவினர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரின் அண்ணன் நெல்சனிடம் எஸ்தர் குறித்து விசாரித்து போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் பொலிஸாருக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக எஸ்தரை கொலை செய்ததாக நெல்சன் ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் எஸ்தரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி இரு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள ஆற்றங்கரை புதரில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் இரு சாக்கு மூட்டையில் கிடந்த எஸ்தரின் உடலை துண்டு பாகங்களாக கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார்கள்.

இதையடுத்து நெல்சன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply