இலங்கையில் அபாய எச்சரிக்கை தொடந்தும் அமுலில்

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விடுக்கப்பட்ட, மண்சரிவு மட்டும் கற்பாறைகள் சரிந்து விழுதல் ஆகிய அனர்த்தங்கள் தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்து அமுலிலிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.கடும் மழையையடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அனர்த்தங்கள் தொடர்பான எச்சரிக்கை நேற்றிரவு விடுக்கப்பட்டது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து இந்த எச்சரிக்கை நடைமுறையிலிருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட, எஹெலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் கேகாலை மாவட்டத்தின் புலத்கோபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல அரநாயக்க, மாவனல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, அகலவத்த, புலத்சிங்கள, இங்கிரிய, வலளாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, நெலுவ, தவலம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply