இத்தாலியில் ரெயில் தடம்புரண்டு விபத்து : 2 பேர் பரிதாப பலி

இத்தாலியில் உள்ள டுரின் மாகாணத்தில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் ரெயில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். ரெயிலானது உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு டுரின் நகரில் இருந்து புறப்பட்டு இவ்ரியாவிற்கு சென்று கொண்டிருந்தது. சுமார் 11.30 மணியளவில் கலுசோ நகருக்கு அருகில் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply