ராஜபக்ச ஆட்சிக்கு மீண்டும் இடமளியோம் :சரத் பொன்சேகா

“ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் ஆட்சிப்பீடமேற இடமளிக்கமாட்டோம்” என்று முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். களனியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், 2020இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த எவருமே நாட்டை முன்னேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் எமது பொருளாதாரம் பல ஆண்டுகளாக வீழ்ச்சிப்பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றது.

எனவே, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீகுவான் போன்ற தலைவர்களே எமது நாட்டுக்குத் தேவை. நல்லாட்சி அரசிலும் குறைபாடுகள் இருக்கின்றன.

அதனால்தான் கடந்த தேர்தலில் மக்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். இது சம்பந்தமாக அரசு கவனம் செலுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, 2020 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம்.

ராஜபக்ச குடும்பத்துக்கு மீண்டும் தலைதூக்க இடமளிக்கமாட்டோம். வெள்ளை வான் கலாசாரம், ஏகாதிபத்திய ஆட்சி ஆகியவற்றை அனுமதிக்கவேமுடியாது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply