நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் : முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பழம்பெரும் அரசியல்வாதியான ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ராமசாமி படையாச்சி, தமிழகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும், திண்டிவனம் மக்களவை தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply