13 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் பிரேசில் நாட்டவர் கைது

13 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபருடைய வயிற்றில் இருந்து 66 கொக்கைன் வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply