உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து : 20 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌன் பகுதியில் இருந்து ராம்நகர் பகுதிக்கு இன்று சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 20 பயணிகள் வரை உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply