பாதாள உலக தலைவர்கள் 7 பேரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸிடம் உதவி கோரல்

டுபாய் நாட்டில் சுகபோக வாழ்வில் ஈடுபடும் பாதாள உலக குழுவை வழிநடாத்தும் மாகந்துரே மதுஷ், கொஸ்கொட சுஜீ உட்பட பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலக தலைவர்கள் ஏழு பேரைக் கைது செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இந்த பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதற்கு சர்வதேச மட்டத்தில் பல கலந்துரையாடல்களை கடந்த சில தினங்களாக முன்னெடுத்து வருவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொலை, கப்பம் எடுத்தல், கொள்ளையடித்தல், பாரியளவிலான போதைப் பொருள் வியாபாரம் போன்றவற்றை முன்னெடுக்கும் முக்கிய நபராக மாகந்துரே மதுஷ் என்பவர் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply