வடக்கின் சுகாதார அபிவிருத்தி செயற்திட்டங்கள் நாளை கையளிப்பு

வடமாகாணத்தில் பல சுகாதார அபிவிருத்திச் செயற்திட்டங்கள் நாளை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளன.இதேவேளை மேலும் பல செயற்திட்டங்களுக்கும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை முன்னறலில் 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாதி விடுதி இல்லமும், புதிய மருந்தகமும் நாளை திறந்து வைக்கப்படும். அத்தோடு, அங்கு நிர்மாணிக்கப்பட உள்ள புனர்வாழ்வளிப்பு வைத்தியசாலை கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல்லையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டி வைப்பார். இதற்காக 530 மில்லியன் ரூபா செலவிடப்படும்.

சாவகச்சேரி தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள இரத்த வங்கியும் நாளை திறந்து வைக்கப்படும். வடமாகாணத்தின் சுகாதார அபிவிருத்திச் செயற்திட்டங்களிலுள்ள முன்னேற்றம் குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் கவனம் செலுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் தலைமையில் நாளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெறும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply