சூடானில் படகு கவிழ்ந்து விபத்து – பள்ளி சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலி

சூடானில் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து 750 கிலோ மீட்டர் வடக்கே அமைந்த நைல் நதியில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இயந்திர கோளாறு காரணமாக பாதி வழியில் பழுதாகி நின்ற படகு திடீரென தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணம் செய்த பள்ளி சிறுவர்களில் 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவரும் பலியாகி உள்ளார்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படகு கவிழ்ந்து சிறுவர்கள் 22 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply