ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான பஸ் மீது தாக்குதல்

கூட்டு எதிர்க்கட்சியின் “மக்கள் பலம் கொழும்புக்கு” ஆர்ப்பாட்டத்ததில் கலந்துகொள்வதற்கு வருகை தர தயாராக இருந்த பஸ் வண்டி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஹாலிஎல போகமதின்ன பகுதியில் இருந்த பஸ் வண்டி ஒன்றின் மீது வாகன இலக்கமின்றி வருகை தந்த ஜீப் வண்டியொன்றிலிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் டிலான் பெரேராவினால் கட்டணம் செலுத்தப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தருவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டியின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ் வண்டியில் இருந்தவர்கள் வேறு பஸ் வண்டிக்கு மாற்றப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply