நாலக டி சில்வாவை பதவி நீக்கம் செய்ய அனுமதி

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி நீக்கம் செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பரிந்துரை செய்திருந்ததார்.

இந்நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று(வியாழக்கிழமை) குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

அவரை குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் நேற்றுமுந்தினம் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமது குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அங்கு முன்னிலையாக முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இன்றைய தினம் முன்னிலையாகுமாறு பொலிஸார் ஊடாக நாலக டி சில்வாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிரான கொலை முயற்சி சதி திட்டம் குறித்த வாக்குமூலம் ஒன்றை வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply