ஜமால் கஷோக்கி திட்டமிட்டே கொல்லப்பட்டதாக ஒப்புக்கொண்டார் சவுதி வழக்கறிஞர்
சவுதி அரேபியாவின் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி திட்டமிட்டே கொலை செய்யப்பட்டதாக சவுதி அரச வழக்கறிஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார்.
சவுதி – துருக்கி கூட்டு நடவடிக்கைப் படைத் தரப்பு அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக சவுதி அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜமால் கஷோக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுவிட்டதாக ஆரம்பத்தில் சவுதி அரசு கூறி வந்தது.
பின்னர் அங்கே நடந்த ஒரு கைகலப்பில் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அது திட்டமிட்ட கொலை என்றும் சவுதி அரச வழக்கறிஞரே தெரிவித்துள்ளார்.
ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது பதிவுசெய்யப்பட்டதாக நம்பப்படும் ஒலிப்பதிவை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இயக்குநர் ஜினா ஹேஸ்பல் செவிமடுத்துள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்தவார தொடக்கத்தில் துருக்கி சென்றிருந்தபோது அந்த ஒலிப்பதிவை கேட்பதற்கு ஜினா அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாம் செவிமடுத்த விபரங்கள் குறித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் விபரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply