இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் : இந்திய வெளியுறவுத்துறை
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கினார். அவருக்குப் பதிலாக ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இது இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதிபர் தனது பதவியை பறிக்க அதிகாரம் இல்லை. நான்தான் இலங்கையின் பிரதமர் என்று ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். மேலும் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், சிறிசேனா அதிரடியாக நாடாளுமன்றத்தை முடக்கினார்.
இந்நிலையில் அண்டை நாடான இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், ‘‘ஜனநாயகம் மற்றும் நெருங்கிய அண்டையான நாடு என்ற வகையில், ஜனநாயகனம் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா எப்போதும் தயராக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply