பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான மனு இன்றே விசாரணைக்கு

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணைகள் இன்றே ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply