பிரதமர் மஹிந்த மீண்டும் குருணாகலில் போட்டியிட தீர்மானம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சமல் ராஜபக்ஷ தலைமை தாங்குவதாகவும் நாமல் ராஜபக்ஷவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply