தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை: ஜனாதிபதி மக்ரோன்

வறுமை கோட்டிற்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு வரிக்குறைப்புகளை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அறிவித்துள்ளார்.தனது ஆட்சியை சவாலுக்கு உட்படுத்திய வன்முறை ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்சில் இதுவரை இல்லாத வகையில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக அமைதியின்மை நிலவிவருகின்ற நிலையில் ஜனாதிபதி நேற்று உயர்மட்ட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
எனினும், எரிபொருள் விலை சீர்த்திருத்தத்திலிருந்து பின்வாங்க மறுத்த ஜனாதிபதி, இச்சீர்த்திருத்தம் 2019ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்தார்.
ஜனாதிபதி தனது முக்கிய உரையில் மேலும் குறிப்பிட்டதாவது, ”பல நாடுகள் மிக மோசமான தருணங்களில் போராடி வருகின்றன. ஆனால், இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண முடியும் என ஆழமாக நம்புகிறேன்.
இதேவேளை, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தேவைப்பாட்டிற்கும் வரிகளை குறைப்பதன் மூலமும்ஈ செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் வலுவான நடவடிக்கைகளுடன் நாம் பதிலளிப்போம். ஆனால், எமது சீரித்திருத்த நடவடிக்கைகளிருந்து பின்வாங்க போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply