ஜனாதிபதியின் வாய்க்கு அவலாகுமா இலங்கை : சிங்கப்பூர் ஒப்பந்த அறிக்கை?

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் குழு மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் அவ்வறிக்கையை ஜனாதிபதியிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (10) கையளித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்க காலத்தில் கடந்த 2018 ஜனவரி 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு அமுலுக்கு வந்துள்ள இவ்வொப்பந்தம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 1000 பக்கங்களைக் கொண்டதான இவ்வறிக்கையை வாசித்தவர்கள் குறைவு என்பது இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று. பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இவ்வொப்பந்தத்தை யாரும் வாசிக்காமல் நிறைவேற்றுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனாலேயே இது குறித்து கற்று நாட்டின் தேசியத்துக்கு பாதிப்பான விடங்கள் இருக்கின்றனவா என அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதியினால் புத்திஜீவிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு எதிரான கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதிக்கு இவ்வறிக்கை ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிக்க புதிய பாதையொன்றை திறந்து கொடுக்கும் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply