நிபந்தனைகள் இன்றியே த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்குகிறது : கபீர் ஹாஷிம்

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனைகளும் இன்றியே ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

இன்று (11) ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழம் வழங்குவதற்கு இரகசிய உடன்படிக்கை செய்துள்ளதாக பொய்யான பிரச்சாரத்தை சில தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். இது முற்றிலும் பொய்யானதும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் தேசியக் கூட்டணி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply