கொழும்பு நகரத்தின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் அதிகாரிகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்காக கொழும்பு நகரத்தில் மாத்திரம் 2000 பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் விஷேட நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதன்போது சிவில் உடையணிந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விஷேட பொலிஸ் குழுக்கள் கொழும்பு நகர் முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக செயற்படும் நபர்கள் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் சம்பந்தமாகவும் விஷேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply