இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கான பதவிப்பிரமாணத்தை செய்து வைத்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனுாடாக கடந்த ஆறு வாரகாலமாக இலங்கையில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒருவர் ஐந்து தடவைகள் பிரதமராக பதவிவகிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply