புதிய பிரதமரானார் ரணில் – யாழில் வெற்றிக்கொண்டாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். நகரில் படடாசுகள் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென ஐனாதிபதி பைத்திரிபால சிறிசேன பதவி நீக்கம் செய்தார்.
இதனையடுத்து புதிய பிரதமராக முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் அமர்த்தினார். இதனால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றியது. இதனையடுத்து ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக மீறல் செயற்பாட்டுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்புக்கு முரனான விடயம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தத்திருந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து நேற்று விலகினார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கடசி ஆதரவார்கள் நகரில் படடாசுகள் கொளுத்தி மகிழ்ந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply