புதிய பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஐந்தாவது முறையாகவும் பிரதமர் பதவியை ஏற்ற ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
அலரி மாளிகையில் வைத்து இந்த விசேட சிறப்புரையை அவர் ஆற்றவுள்ளதாக களத்திலுள்ள செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த ரணில் விக்ரமசிங்க தற்பொழுது அலரி மாளிகைக்கு வருகை தரவுள்ளார்.
அலரி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 50 நாட்களாக நீதிக்காக குரல் கொடுத்து போராடியவர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரினால் நிரம்பிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டதன் பின்னர் பிரதமர் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply