எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் சுமூகமடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்கவேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர தீர்மானித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துகெட்டிகம தெரிவித்தார். இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பான எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply