ஜனாதிபதி வேட்பாளர் இதுவரையில் தீர்மானம் இல்லை: ஸ்ரீ ல.சு.க.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட எதிர்வரும் நாட்களில் கட்டியெழுப்பப்படவுள்ள பலமான அரசியல் கூட்டணியினால் முன்வைக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரையில் எந்தவித தீர்மானமும் இல்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் அவசரப்பட்டு, எதிரிகளின் சதிவலையில் விழுவதற்கு தமது கட்சி தயாரில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் வெளியிடுவோம் எனவும், பலமான கூட்டணியாக இருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க இருக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனதான் என உறுதியாகவும், தொடர்ந்தேர்ச்சியாகவும் தெரிவித்துவந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply