புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி பிள்ளைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கடற்படையினரிடம் பிடிபட்டனர்
பதினொரு பேர் கொண்ட படகு ஒன்றை இன்று (மே.15) காலை கடற்படையினர் கடலில் வைத்து காப்பாற்றியுள்ளனர். அவர்களில் புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி சத்தியதேவி, மகன் சுரேஸ் (வயது 16), மகள் மதி (வயது 17) என்போர் பிடிபட்டதாக படைதுறை செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுடன் சூசையின் மனைவியின் சகோதரியும் அவரது மகனும் சேர்த்து மொத்தம் 11 பேர் கடற்படையினரிடம் சரண் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூசையின் குடும்பத்தினரிடம் ஒரு தொகை பணமும் அதனுடன் நகைகளும் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. (corrected & updated)
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply