எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்துச் சிதறிய விபத்தில் மீண்டும் ஒருவர் பலி

எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்துச் சிதறிய விபத்தில் அமெரிக்காவில மீண்டும் ஒருவர் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி டெக்சாஸைச் சேர்ந்த பிரவுன் என்ற 24 வயது இளைஞன், எலக்ட்ரானிக் சிகரெட்டை புகைக்க முயன்றார். அப்போது திடீரென அது வெடித்துச் சிதறியதில் உலோகப் பாகங்கள் கழுத்தில் பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் மூலம் இது உறுதி செய்யப்பட்டது.
இரு தினங்களில் பக்கவாதம் ஏற்பட்டு பிரவுன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்ததால்தான் பிரவுன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் ஈ சிகரெட் வெடித்து நிகழ்ந்த இரண்டாவது மரணம் இதுவாகும். 2015 முதல் 2017 வரை 2 ஆயிரத்து 35 ஈ-சிகரெட்டுக்கள் வெடித்துச் சிதறிய விபத்துக்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply