ஐ.தே.க.யின் ரவி : சஜித் முரண்பாடு குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து

அரசாங்கத்தைக் கொண்டு நடாத்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அடுத்த தலைமைத்துவத்தை யார் எடுப்பது என்பதில் தான் போட்டி நிலை காணப்படுவதாகவும், நாட்டு மக்களின் தேவைகள் குறித்து எந்தவித கரிசனையும் காணப்படாதிருப்பதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குற்றம்சாட்டினார்.

நுவரெலியாவிலுள்ள தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ரவி-சஜித் கருத்து முரண்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறினார்.

நாட்டு மக்களுக்கு இன்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பொருட்களின் விலை அதிகரிப்பு, விவசாயிகளின் பொருட்களுக்கு விலையைத் தீர்மானிக்க முடியாதுள்ளமை, சூழல் நாசமடைந்துள்ளமை, அபிவிருத்தி நடவடிக்கைகள் எதும் முன்னெடுக்கப்படாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு மக்கள் உட்பட்டுள்ளனர்.

இவை எவற்றிலும் கவனம் செலுத்தாமல், கட்சியில் தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதில் சதி முயற்சிகளும், கருத்து மோதல்களும் தான் அரசாங்கத்தின் பிரச்சினையாக இன்று மாறியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply