ஏற்கனவே தெரிந்திருந்தும் அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை : காதினல் கேள்வி

நாட்டில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்காக எவரின் மீதும் கைவைப்பதற்கு வேண்டாம் என நாட்டிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

இன்று காதினலின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற சர்வமத தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த சம்பவத்தை ஏற்கனவே அரசாங்கம் அறிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரதமரும் இதனை வெளிப்படையாக கூறியிருந்தார். அப்படியாயின் அரசாங்கம் ஏன் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அமைச்சர் ஒருவரின் தந்தை மறுநாள் ஆலயத்துக்கு செல்ல வேண்டாம் என தனது மகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஏன் அந்த தகவலை அமைச்சர் பொது மக்களுக்கு வழங்கவில்லை எனவும் காதினல் மெல்கம் ரஞ்ஜித் கேள்வி எழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply