சாய்ந்தமருது பிரதேசத்தில் இதிவரை 15 சடலங்கள் மீட்பு

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சண்டை இடம்பெற்ற இடத்தில் இருந்து 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறுவர்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்று மற்றும் அதனை அண்டி ய பகுதிகளில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர வீடொன்றில் இருந்து படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply