கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாக கோரி கப்பம் கோரும் கூட்டம் குறித்து தகவல்

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகள் என்பவற்றின் போது கைது செய்யப்பட்டவர்களை சிறையிலிருந்து விடுவித்துத் தருவதாக தெரிவித்து, அவர்களது உறவினர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply