ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ஹிஸ்புல்லா

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.இவர் இன்று(காலை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று ஆஜராகி அவர் சாட்சியம் வழங்கிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply