புதிய பொலிஸ் அத்தியட்சகர் : வடக்கு ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (14) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதுடன் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply