ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் : சுனாமி ஆபத்து இல்லை

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது. பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளைவிட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர்.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் அடைந்ததாகவோ, உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.

இந்த அளவிற்கு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டபோதிலும், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply