ஜப்பானில் பெய்த கனமழைக்கு இருவர் பலி : 6 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு மாகாணம் குயூஷுவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சகா, நாகசாகி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற நிகழ்வுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமான மக்களை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply